Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»Dr.அம்பேத்கர்»குடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்
    Dr.அம்பேத்கர்

    குடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்

    SasikumarBy SasikumarJanuary 26, 2026No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக் காத்துக் கொள்ளவும் தனக்கென தனித்த அரசமைப்பு அடிப்படையிலான அரசை நிர்மாணித்துக் கொள்ளவும் கடுமையான நிர்பந்தத்தில் துணைக்கண்டம் அப்போது நின்றது. சுதந்திர இந்தியாவின் தேச நிர்மாணம் என்பது அவ்வளவு எளிதான காரியமா? எந்தவித முன்பயிற்சியுமற்ற தலைவர்கள் மாபெரும் இந்தியக் கூட்டரசை நிர்மாணிக்க பெரும் முயற்சிகளை எடுத்தார்கள் என்று நமது வரலாறு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் அந்த வரலாற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்கு என்ன என்பதைப் பற்றி மிக லாவகமாக மறைத்திருக்கிறது. மறைத்தது ஆதிக்கச் சாதி புத்திதான்.

    ஒருவரின் பங்களிப்பை நன்றியோடு நினைவுக்கூர்வது ஒரு நேர்மையுள்ள சமூகத்திற்கு அழகு. அந்த அழகு இந்தியச் சமூகத்திற்கு என்றைக்கும் வாய்த்ததில்லை. சேரிகளில் உழலும் தலித்துகளின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு, எந்தவித உறுத்தலும் இன்றி சுரண்டிப் பிழைக்கும் சாதி இந்து புத்திதான் புதிய இந்தியாவை நிர்மாணம் செய்த அம்பேத்கரின் விசயதிலும் நடந்தது.

    இந்திய விடுதலை அறிவிக்கப்பட்டப் பிறகு புதிய இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டத்தை சுமார் மூன்று ஆண்டுகள் தனியொரு நபராக நின்று, தனது உடல் பலவீனத்தினையும் பொருட்படுத்தாமல் உருவாக்கினார் புரட்சியாளர் அம்பேத்கர். அவர் சட்டவியலில் மட்டும் மேதைமை வாய்த்தவர் அல்ல, அதைவிடவும் மானுடவியல், சமூகவியல், வரலாற்றியல், மொழியியல், தத்துவவியல், புள்ளியியல். மதவியல் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அரசியல் பொருளாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் அவர்தான். ஒரு நாட்டிற்கு அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்க வேண்டும் என்றால் அரசியல் பொருளாதார மேதமை இல்லாமல் உருவாக்குவது கடினம். அதுவுமின்றி பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மேதையாக அவர் இருந்தக் காரணத்தினால்தான் நவீன இந்தியாவிற்தகான அரசமைப்புச் சட்டத்தினை வடிவமைக்கத் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதை அவர் உடனே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தனி வரலாறு.

    இந்தியாவில் சமத்துவ சமூதாயம் அமைக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் பெரிதும் விரும்பினார். சோசலிசம் என்பது வன்முறையின் மூலம் அல்லாமல் ஜனநாயகத்தின் மூலமாக அமைக்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டை அவர் கொண்டிருந்தார். ஏனெனில் இந்தியாவில் சமூக மாற்றமானது ஐரோப்பாவில் நடந்ததைப் போன்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வரிசைக் கிரமத்தில் நடைபெறவில்லை தெளிவாக அவர் அறிந்தவர். அதனால் ஒரு மாற்று வடிவத்தில் சோசலிசத்தினை கொண்டுவர வேண்டும் என்று அவர் விரும்பியக் காரணத்தினால், அரசமைப்புச் சட்டத்தில் அதை அடிப்படையாக வைத்தார்.

    அரசு சோசலிசத்திற்கு நேரு மட்டும் காரணம் என்று சொல்பவர்கள் அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்க நேருவின் பங்களிப்பு என்ன என்பதை அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், அரசமைப்புச் சட்டத்தில் சமூக சோசலிசத்திற்கான அடிப்படைகளை அம்பேத்கர் வரையறுக்காமல் போய்விட்டிருந்தால் அரசு சோசலிசம் என்பது இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்குமா என்பதே கேள்விக் குறிதான்.. ஆனாலும் இந்தியாவில் அரசு சோசலிசம் என்பது நிர்மாணிக்கப்பட்டது. அதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்தான் ஜனவரி 26 1950.

    ஆனால் இந்த நாளில் அம்பேத்கர் எப்போதும் நினைவுகூறப்பட மாட்டார். மாறாக யாரெல்லாம் அரச சோசலிசத்தினை குழிதோண்டிப் புதைத்தார்களோ அவர்களெல்லாம் முன்னிருந்தப்படுகிறார்கள். கேடுகெட்ட தரகர்களின், சினிமா கழிசடைகளின், ஆளும் கும்பலின் அடிவருடிகளின் மோசடிகளை மறைத்து சாகசங்களாக முன்னிருத்தும் நாளாகத்தான் ஜனவரி 26 மாற்றப்பட்டிருக்கிறது.

    https://ambedkar.in/wp-content/uploads/2026/01/ams1.mp4

    இந்து பயங்கரவாதிகளின் கட்சிகள், அவர்களின் ஊதுகுழலாக இருக்கும் பனியா ஊடகங்கள் இந்திய தேசத்தின் தேசப்பற்றினை போற்றுகிறோம் என்று கூசாமல் சொல்லிக் கொண்டு அப்பட்டமாகவே அரசு சோசலிசத்தின் உயிரோட்டத்தினை குழி தோண்டி புதைத்து விட்டார்கள். இனி அது மீள்வதற்கான வாய்ப்புகள் அருகிவிட்டன என்றாலும் சீரிய சிந்தனைகளை முன்னெடுப்பவர்களும், சாதி பேதமற்ற சமத்துவ சமூகத்தினை அமைக்க விருப்பம் உள்ளவர்களும், ஒரு சமதர்ம நாட்டை கட்டமைக்க அடித்தளமிட்டவரின் பங்களிப்பை போற்ற வேண்டும். சாதி மனநிலையில் நின்றுக்கொண்டு அம்பேத்கரின் அர்ப்பணிப்பை மறப்பது மன்னிக்க முடியாத துரோகம்.

    எனவே அம்பேத்கரின் மாபெரும் பங்களிப்பை, அவர் என்னவிதமான சமூக அமைப்பை அமைக்க விரும்பினாரோ, அதை முன்னெடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 26 குடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்.

    சன்னா

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஅம்பேத்கரின் கனவு கிராமம்!வியந்து பார்த்த மத்திய அரசு!தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமமா?
    Next Article சமத்துவ தலைவர் அண்ணன் ஆம்ஸ்டாங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    Sasikumar
    • Facebook

    அம்பேத்கரியர், கற்பி அறக்கட்டளையின் நிறுவனர். அம்பேத்கர்.இன் இணையதளத்தின் உறுவாக்கத்திற்கு காரணமானவர்களின் ஒருவர்.

    Related Posts

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    Comments are closed.

    Recent Posts
    • சாதி ஒழிப்பு (Annihilation of Caste)
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    Random Posts

    இவரே தமிழ்த் தாத்தா!

    May 5, 2021

    மகிழ்வான வாழ்வுக்கான தேடல்

    June 26, 2024

    மாற்றுப்பாதை – க.ஜெயபாலன்

    June 23, 2011

    Dalit boy beaten up by teacher for touching drinking water pot in Rajasthan school, dies

    August 13, 2022
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.