Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.
தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய மதுரை சென்னகரம்பட்டியில், சாதிவெறியுணர்வும், தீண்டாமைக் கருத்துணர்வும் கொண்ட கள்ளர் சாதியைச் சார்ந்த பெரும் கும்பல், திரண்டு சென்று, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் இருவரை நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்தது. குரூரமான சாதிய மண்டபங்களாக இன்று வரை செயல்பட்டுக் கொண் டிருக்கும் இந்திய கிராமங்களில், தாழ்த்தப்பட்ட மக்களைச் சாதி இந்துக்கள் மிகப் பயங்கர ஆயுதங் களுடன் ஊரோடு திரண்டு சென்றுதான் தாக்கு கிறார்கள். படுகொலையும் செய்கிறார்கள். அப்படிப் பட்ட கொடூரச் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையானது சாதிவெறியுணர்வும், தீண்டா மைக் கொள்கையும்தான். இந்த அடிப்படையான சமூக அறிவில்லாமல்தான் விசாரணை நீதிபதிகளும் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தீர்ப்பெழுதி வருகிறார்கள். 1987ஆம் ஆண்டிலிருந்தே சென்னகரம்பட்டி சாதி இந்து கள்ளர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கோயில் நிலத்தை குத்தகை எடுப்பது தொடர்பான சிக்கல்கள் இருந்து வந்தன. சென்ன கரம்பட்டியில் உள்ள அம்மச்சியம்மன் கோயில் நிலத்தை நீண்டகாலமாகவே கள்ளர் சாதியினர்தான் குத்த¬க்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.…
தமிழ்நாட்டையே அவமானப்படச் செய்த திண்ணியம் வன்கொடுமை வழக்கும் மிக மோசமான முறையில் முடிவுக்கு வந்தது. திருச்சி அருகேயுள்ள திண்ணியம் என்ற கிராமத்தில், தொகுப்பு வீடு ஒதுக்கித் தர கள்ளர் சாதியைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமியின் கணவர் சுப்பிரமணியனிடம் ரூபாய் இரண்டாயிரத்தைத் தலித் சமூகத்தைச் சார்ந்த கருப்பையா என்பவர் லஞ்சமாகக் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும், வீடு ஒதுக்கித் தரவில்லை என்பதால், கருப்பையா தான் கொடுத்தத் தொகையை திருப்பித் தருமாறு பலமுறை சுப்ரமணியனிடம் கேட்டு கெஞ்சியுள்ளார். தொகை யைத் திருப்பித் தர ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் மறுத்ததினால், பணத்தை திருப்பித் தரச் செய்யும்படி கிராம மக்களுக்கு அறிவிப்புச் செய்யும் நோக்கத் தோடு தண்டோரா அடித்துத் தெரியப்படுத்தினார் கருப்பையா. அப்போது அவருடன் ராமசாமி, முருகேசன் என்ற இரு தலித் சமூகத்தவரும் சென்றுள்ளனர். அதை அறிந்த ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் தங்களைக் கேவலப்படுத்தி விட்டதாக ஆத்திரம் கொண்டு, கருப்பையாவை வீட்டுக்கு அழைத்து வரச் செய்து கடுமையாகத்…